கோலாலம்பூர், ஏப் 27 – செந்தூல் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் பட்டாசுகள் அழிக்கும் இடத்தில் தீ ஏற்பட்டதைத் தொடர்ந்து மூவர் காயம் அடைந்தனர். அந்த தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்ததால் அங்கு தீப்பிடித்ததாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Beh Eng Lai கூறினார். அந்த கட்டிட அமைப்பின் 30 விழுக்காடு பகுதியும் அங்குள்ள பொது இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50 வாகனங்களும் சேதம் அடைந்தன. நேற்று மாலை மணி 6.15 அளவில் ஏற்பட்ட அந்த தீ விபத்தினால் அருகேயுள்ள பல்வேறு கடைகள் மற்றும் சீக்கிய பள்ளியின் கூரைகள் மற்றும் கண்ணாடி ஜன்னல்களும் பாதிக்கப்பட்டதாக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
Related Articles
Check Also
Close