
கோலாலம்பூர், பிப் 7- செந்தூல் ஸ்ரீ திரெங்கானு (Sri Terengganu) பொது வீடமைப்பு பகுதியில் 10 ஆவது மாடியிலுள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
50 வயது மதிக்கத்தக்க அந்த பெண் வீட்டின் குளியல் அறையில் இறந்துக் கிடந்ததை தீயணைப்பு மற்றும் மீடபுத்துறையினர் கண்டுப்பிடித்தனர்.
பின்னிரவு மணி 12.38 அளவில் இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கை பிரிவின் முதிர்நிலை காமண்டர் E. யோகேஸ்வரன் (E Yogeswaran) தெரிவித்தார்.
செந்தூல் , தித்தி வங்சா (TItiwangsa) மற்றும் ஹங்துவா (Hang Tuah) ஆகிய தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த சுமார் 20 தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதிகாலை மணி 1.30 அளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின் அந்த இந்தோனேசிய பெண்ணின் சடலம் மேல் நடவடிக்கைக்காக போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது.
தீவிபத்திற்குள்ளான வீடு 90 விழுக்காடு அழிந்ததாக யோகேஸ்வரன் தெரிவித்தார்.