
கிள்ளான், மார்ச் 14- கடுமையான வெள்ளம் காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஜோகூர், Chaah வட்டாரத்தைச் சேர்ந்த 371 குடும்பங்களுக்கு Sentosa சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தலைமையில் 20 பேர் கொண்ட Sentosa தன்னார்வலர் குழுவினர் உணவுப் பொருள்கள் மற்றும் வீடுகளைத் துப்புரவு செய்யும் உபகரணங்களை கொடுத்து உதவி வழங்கினர்.
தாமான் Sentosa குடியிருப்பாளர் சங்கங்கள் மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்புடன் இந்த வெள்ள நிவாரண உதவித் திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் கூறினார்.
இந்த திட்டத்திற்காக சுமார் 40,000 ரிங்கிட் செலவிடப்பட்டது.
2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் Sentosa தொகுதியும் பாதிக்கப்பட்ட போது எங்களுக்கு பலரும் உதவி நல்கினர்.
அந்த கடப்பாட்டின் அடிப்படையில் நாங்களும் பேரிடர் ஏற்படும் பகுதிகளில் உதவிகளை வழங்கி வருகிறோம் என அவர் குறிப்பிட்டார்.