கிள்ளான், செப்டம்பர் 24 – செந்தோசா சட்டமன்றத் தொகுதி, சிலாங்கூர் சிறுவர் நட்சத்திரங்கள் பாடும் திறன் போட்டியை மூன்றாவது ஆண்டாக ஏற்பாடுச் செய்துள்ளது.
சிறுவர்களின் திறனை வெளிப்படுத்த மேடை அமைத்து தரும் உன்னத நோக்கில், இப்பாடல் திறன் போட்டி தொடர்ந்து நடத்தி வருவதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் கூறினார்.
9 வயது முதல் 15 வயதிலான, சிறார்களை இலக்காக கொண்ட இப்போட்டியின், தொடக்க சுற்றுகள் எதிர்வரும் அக்டோபர் மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
அதேவேளையில், அரையிறுதி சுற்று அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறும் என்றார், அவர்.
சுமார் 15,000 ரிங்கிட் ரொக்கப் பரிசை வெல்லும் வாய்ப்பினை வழங்கும் இப்போட்டியின் இறுதிச் சுற்று, புக்கிட் ஜாலில் அரங்கில் அக்டோபர், 27ஆம் திகதி நடைபெறவிருக்கிறது.
இப்போட்டியில் கலந்து கொள்ள இதுவரை 60 பேர் பதிவு செய்துள்ளதாகக்
கூறிய அவர், பதிவுக்கான இறுதி நாள் செப்டம்பர் 29ஆம் திகதி வரை என்றார்.
ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக தங்களின் பங்கேற்பை பதிவு செய்யுமாறு, அவர் கேட்டுக்கொண்டார்.