நியூ டெல்லி, செப்டம்பர் 2 – ஹரியானா (Haryana) மாநிலம் குருகிராமிலிருந்து (Gurugram), சென்னைக்கு வந்து கொண்டிருந்த கனரக வாகனத்தை வழிமறித்து அதிலிருந்து 1,600 ஐபோன்களை கொள்ளை கும்பல், சினிமா பாணியில் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட ஐபோன்களின் மதிப்பு மலேசிய ரிங்கிட்டிற்கு, சுமார் 6.17 மில்லியனுக்கு அதிகமாகும்.
முதற்கட்ட விசாரணையில், ஐபோன்களை ஏற்றிக்கொண்டு வந்த கனரக வண்டியில் ஓட்டுநருடன் ஒரு பாதுகாவலரும் இருந்துள்ளார்.
அப்போது நடுவழியில் தனது நண்பர் என்றும் மற்றொருவரை அந்த வண்டியில் பாதுகாவலர் ஏற்றியதாகவும், அதன்பிறகே இந்த கொள்ளை சம்பவம் அரங்கேற்றியிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை தனிப்படை குழு அமைத்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது.