Latestஇந்தியா

சென்னை உட்பட பல இடங்களில் கடும் மழை; பள்ளிகள் – கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை , நவ 26 – தமிழகத்தில் நேற்று காலை முதல் பெய்த கன மழை இன்றும் பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கால்வாய்களில் நீரோட்டம் தடைப்பட்டதால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. திருச்செந்தூர் முருகன் ஆலயத்திலும் வெள்ளம் ஏற்பட்டது. பல இடங்கள் வெள்ளக் காடாக காட்சியளித்தன. பலர் வெள்ளம் தொடர்பான காணொளிகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். வெள்ளத்தின் காரணமாக பல சுற்றுலா இடங்களும் மூடப்பட்டன.

திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், திண்டுக்கல், அரியலூர், தேனி, பெரம்பலூர், தஞ்சாவூர் உட்பட 15 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக சென்னை – தூத்துக்குடி விமானச் சேவை திருச்சிக்கு மாற்றப்பட்டது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,திருவள்ளூர், திருநெல்வேலி, தூத்துக்கு, தென்காசி உட்பட பல்வேறு பகுதிகளில் கடுமையாக மழை இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!