சென்னை, மார்ச் 4- நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சென்னை மாநகராட்சியில் 153 இடங்களில் அமோக வெற்றி பெற்று உள்ளது. அந்த வெற்றியைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியின் அடுத்த மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், பிரியா ராஜன் என்பவர் அப்பொறுப்பை ஏற்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
28 வயதான அவர் எம்.காம் முடித்த முதுநிலை பட்டதாரி ஆவார். மேயராகப் பதவி ஏற்கும் பிரியா மாநகராட்சியின் முதல் தலித் மேயர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.