
கோத்தா கினபாலு, மார்ச் 23 – சூடானிலிருந்து 92 பயணிகளுடன் சிங்கப்பூர் திரும்பிக் கொண்டிருந்த Cebu Pacific Air விமானத்தின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவ்விமானம் கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. நேற்றிவு 10 மணியளவில் அந்த விமானம் அவசரமாக தரையிறங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த விமானம் தரையிறங்குவதற்கு முன்னதாகவே தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைப் பிரிவினர் விமான நிலையத்தில் முன்கூட்டியே விழிப்புடன் நிறுத்தப்பட்டிருந்தனர். அந்த விமானம் பாதுகாப்புடன் தரையிறங்கியங்கியவுடன் அதிலிருந்த அனைத்து பயணிகளும் வெளியேறினர்.