செப்பாங், செப்டம்பர்-11 – KLIA 2 அருகே இன்று காலை டேக்சியால் மோதப்பட்ட ஆடவர், அவ்வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்டார்.
சாலை விபத்தில் சிக்கிய தனது காரைப் பார்பதற்காக வெளியே இறங்கி வந்தவரை, வேகமாக வந்த டேக்சி மோதித் தள்ளியது.
அதில் டேக்சிக்கு அடியில் சிக்கிக் கொண்ட 40 வயது மதிக்கத்தக்க அந்நபரை வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிந்ததாக, தீயணைப்பு மீட்புத் துறை சுருக்கமாக வெளியிட்ட அறிக்கையில் முன்னதாக தெரிவித்திருந்தது. இதனிடையே தற்போது அந்த ஆடவர் மரணம் அடைந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.