
செப்பாங், ஜனவரி-15, சிலாங்கூர், செப்பாங்கில் பொது இடத்தில் ஒரு பெண்ணிடம் ஆணுறுப்பைக் காட்டிய சந்தேகத்தில் கட்டடப் பராமரிப்பாளர் கைதாகியுள்ளார்.
Savanna Southville City-யில் திங்கட்கிழமை மதியம் அச்சம்பவம் நிகழ்ந்தது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த போலீஸ் புகாரின் பேரில், அன்று நள்ளிரவே 32 வயது அவ்வாடவர் கைதானார்.
சம்பவத்தின் போது காரினுள் இருந்த சந்தேக நபர், அவ்வழியே நடந்துசென்ற பெண்ணை அருகில் அழைத்து தனது மர்ம உறுப்பைக் காட்டியதாக, செப்பாங் போலீஸ் துணைத் தலைவர் ஷான் கோபால் கூறினார்.
இந்நிலையில் விசாரணைக்காக அவ்வாடவர் 3 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுளார்.
குற்றம் நாரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறையும் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக ஷான் சொன்னார்.