புத்ராஜெயா, செப்டம்பர் 20 – இன்று சிலாங்கூரின் செப்பாங் மற்றும் கோலா லங்காட்டிலுள்ள கடலோரப் பகுதிகளில், 5.8 மீட்டர் உயரம் வரை கடல் நீர் பெருக்கெடுத்து எழுந்துள்ளன.
இதனால் சாலையில், வாகன நிறுத்துமிடம் உட்படச் சுற்றுலா இடங்களிலும் கடல் நீர் பாய்ந்து ஓடுவதால், அங்குள்ள பொழுதுபோக்கு கடற்கரைகளில் கவனமாகக் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நீச்சல் அடித்தல், மணலில் விளையாடுதல், மீன்பிடித்தல், படகு சவாரி போன்ற கடலோர பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.