
செமஞ்ஞே, ஜனவரி-16, காஜாங், செமஞ்ஞேவில் கடந்த மாதம் ஓர் ஆடவரைத் தாக்கி வைரலான நால்வரை போலீஸ் கைதுச் செய்துள்ளது.
டிசம்பர் 29-ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு கடை வீதியில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக, காஜாங் போலீஸ் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் (Naazron Abdul Yusof) தெரிவித்தார்.
32 முதல் 36 வயதிலான சந்தேக நபர்கள் கடந்த ஒரு வாரத்தில் வெவ்வேறு இடங்களில் கைதாகினர்.
அபாயகரமான ஆயுதங்களால் தாக்கி வேண்டுமென்றே காயம் விளைவித்ததன் பேரில் நால்வரும் விசாரிக்கப்படுகின்றனர்.
இதையடுத்து அத்தாக்குதலுக்கானக் காரணத்தை விரைவிலேயே கண்டறிய முடியுமென நாஸ்ரோன் நம்பிக்கைத் தெரிவித்தார்.
அவர்கள், போதைப்பொருள் உட்பட்ட பல்வேறு குற்றப்பதிவுகளைக் கொண்டிருப்பதும் தெரிய வந்தது.
முன்னதாக வைரலான வீடியோவில், ஒரு கையில் மரப் பலகையை வைத்திருந்த ஆடவர், மறு கையால் பாதிக்கப்பட்ட ஆடவரை பிடித்துகொண்டார்.
இருவரையும் சுற்றி மூவர் நின்றுகொண்டிருந்தனர்; அவர்களில் ஒருவரது கையில் steering lock இருந்தது.
Steering lock வைத்திருந்தவரும் மரப் பலகை வைத்திருந்தவரும் பாதிக்கப்பட்டவரைப் போட்டு புரட்டி எடுக்க, அந்நபர் தன் கைகளால் தற்காத்துக் கொள்ள முயலுவதை வீடியோவில் காண முடிந்தது.