
ஷா ஆலாம், டிச 25 – வாசனை திரவியம் கொட்டி மாசடைந்ததால் நிறுத்தப்பட்ட Sungai Semenyih நீர் சுத்திகரிப்பு ஆலை, இன்று காலை தொடங்கி மீண்டும் செயல்படத் தொடங்கியது. அதையடுத்து, அந்த ஆலையில் சுத்தப்படுத்தும் பணிகளும் நீரை சுத்திகரிக்கும் பணிகளும் 12 மணி எடுத்துக் கொள்ளுமென Air Selangor நிறுவனம் தெரிவித்தது.
இவ்வேளையில் அந்த ஆலை மூடப்பட்டதால், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு , தண்ணீர் லாரிகள் அனுப்பப்பட்டு வருவதாக அந்நிறுவனம் ஓர் அறிக்கையின் வாயிலாக குறிப்பிட்டது. நீர் தடைப்பட்ட பகுதிகளில், மருத்துவமனை, கிளினிக், சிறுநீரக சுத்திகரிப்பு மையம், இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்படும் இடங்கள் ஆகியவற்றுக்கு நீரை விநியோகிப்பதில் முன்னுரிமை தரப்படுமென அந்நிறுவனம் கூறியது.