
லாபுவான், செப் 6 – பேராக், செமோரைச் சேர்ந்த 30 வயது ஹர்வின் லோகநாதன் எனும் மருத்துவர், லாபுவானில் இன்று சாலை விபத்தில் மரணமுற்றார்.
மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த அவர், காலை 7.50 மணியளவில் சிம்பாங் ரங்காஸ் அருகே எதிரே வந்த காருடன் மோதி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்ததாக லாபுவான் போலிஸ் தலைவர் முகமட் அமிசி ஹலிம் தெரிவித்தார்.
டாக்டர் ஹர்வின் மோட்டார் சைக்கிளை ஓட்டிக் கொண்டிருந்த சமயத்தில், ஒரு வளைவுப் பாதையில், கட்டுபாட்டை இழந்ததால், சாலையை விட்டு விலகி எதிரே வந்த ஓர் காரின் மீது நேருக்கு நேர் மோதியதாக அவர் கூறினார்.
அந்த காரை 38 வயது பெண் ஒருவர் ஓட்டி வந்துள்ளார். டாக்டர் ஹர்வினின் உடல் லபுவான் மருத்துவமனைக்கு சவப்பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள வேளையில், இவ்விபத்து குறித்த விசாரணை தொடர்வதாக அவர் தெரிவித்தார்