
சபா பெர்ணம், மே 24 – சுங்கை பெர்ணம், கம்போங் சுங்கை லீமாவில் மாட்டுப் கொட்டகைக்கு அருகேயுள்ள செம்பனை தோட்டத்தில் எரியூட்டப்பட்ட ஆடவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
புகைந்துக் கொண்டிருந்த இடத்தில் சென்று பார்த்தபோது அங்கு உடல் ஒன்று எரிந்துக் கொண்டிருந்ததாக பொதுமக்களிடமிருந்து புகார் கிடைத்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு போலிசார் விரைந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் போலீஸ் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருவதால் எந்தவொரு ஆருடங்களையோ அல்லது அனுமானங்களையோ வெளியிட வேண்டாம் என பொதுமக்களை போலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது.