
கோத்தா கினபாலு, மார்ச் 30 – Semporna மாவட்டத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஒருவர் 10 நாட்களாக காணாமல்போனது ஒரே மர்மமாக இருப்பதாகவும் அவருக்கு என்ன நடந்தது, அவர் எங்கே இருக்கிறார் என்பது போன்ற கேள்விகளுக்கு எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லையென போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ Acryl Sani Abdullah Sani தெரிவித்தார். பல்வேறு சாத்தியங்கள் குறித்தும் தாங்கள் ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.
பிணைப்பணம் தொடர்பாகவும் எந்தவொரு அழைப்பையும் போலீஸ் பெறவில்லை. அவருக்கு தனிப்பட்ட பிரச்சனை இருக்கிறதா அல்லது நிதி நெருக்கடியை எதிர்நோக்கினாரா என்பதுகூட எதுவும் தெரியவிலையென Acryl Sani தெரிவித்தார்.
31 வயதுடைய அந்த பொற்கொல்லர் ஆகக்கடைசியாக தமது வீட்டிலிருந்து வெளியேறி அடையாளம் தெரியாத ஒருவருடன் காரில் சென்றதாக கூறப்பட்டது .
Gan Ka Keat என்று அடையாளம் கூறப்பட்ட அந்த பொற்கொல்லரை காணவில்லையென்று அவரது குடும்பத்தினரும் போலீசில் புகார் செய்துள்ளனர்.