
லண்டன், மே 21 – பிரிட்டனின் முன்னாள் ராணுவ வீரர் ஹரி புத்தமகர் ( Hari Budha Magar ) செயற்கை கால்களின் உதவியோடு எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை புரிந்துள்ளார். ஆப்கானிஸ்தானில் பணியாற்றியபோது அங்கு நடந்த போரில் அவர் தனது இரண்டு கால்களையும் இழந்தார். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் செயற்கை கால்களுடன் வாழ்க்கையை எதிர்க்கொண்ட அவர் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொள்ளும் விரக்திக்கும் சென்றார். எனினும் வாழ்கையில் சாதனை படைக்க வேண்டும் என்ற இலக்கோடு எவரெஸ்ட் ஏறும் தமது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். தனது இரண்டு கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் செயற்கை கால்களுடன் 8,848 மீட்டர உயரம் கொண்ட உலகின் மிக உயரமான சிகரத்தை ஏறி 43 வயதுடைய ஹரி புத்தமகர் சாதனை படைத்துள்ளார்.