Latestமலேசியா

அதிக வெப்பம்: பள்ளிச் சீருடை அணியும் SOP-யில் மாற்றமில்லை

கோலாலம்பூர், பிப்ரவரி-27, பள்ளிச் சீருடை அணிவது தொடர்பில் நடப்பில் உள்ள வழிகாட்டி கோட்பாடுகள், புதியக் கல்வியாண்டிலும் தொடரும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எச்சரிக்கை அளவிலான வெப்ப நிலையை எதிர்நோக்கும் என கணிக்கப்பட்டுள்ள 12 இடங்களுக்கும் அது பொருந்தும் என துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.

ஒருவேளை வெப்ப நிலை அபாயக்கட்டத்தை எட்டினால், மலேசிய வானிலை ஆராய்ச்சித் துறை MetMalaysia-வுடன் கலந்து பேசி, இறுதி முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.

தற்போதுள்ள நிலவரப்படி, சம்பந்தப்பட்ட அந்த 12 பகுதிகளிலும் வெப்ப நிலை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக Met Malaysia தெரிவிக்கிறது.

எனவே, சீருடை அணிவது தொடர்பான வழிகாட்டியில் எந்த மாற்றமும் இல்லை என துணை அமைச்சர் சொன்னார்.

ஆக, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி, மாணவர்கள் இரண்டு நாட்களுக்கு பள்ளிச் சீருடையும், 2 நாட்களுக்கு விளையாட்டு உடையும், ஒரு நாள் புறப்பாட நடவடிக்கைக்கான உடையையும் தொடர்ந்து அணிந்து வரலாம் என்றார் அவர்.

நான்கு மாநிலங்களில் 12 இடங்களில் வெப்ப நிலை அதிகரித்து, நாளொன்றுக்கு அதிகபட்சமாக 35 முதல் 37 செல்சியல் வரை பதிவாகி, குறைந்தது 3 நாட்களுக்கு அந்நிலை நீடிக்கும் என MetMalaysia முன்னதாக கணித்திருந்தது.

பெர்லிஸ், கெடாவில் லங்காவி தீவு, குபாங் பாசு, கோத சிதார், போக்கோ சினா, பிண்டாங்க், பாடாங் திராப் சிக், பாலிங் மற்றும் கூலிம், பேராக்கீல் குவாலா கங்சார், சபாவில் பியூஃபோர்ட் ஆகியவையே அந்த 12 இடங்களாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!