
பல ஆண்டுகளாக செயலிழந்த பழைய கணக்குகளை நீக்கும் பணியில் ட்விட்டர் ஈடுபட்டுள்ளதாக, அதன் உரிமையாளர் எலோன் மஸ்க் தெரிவித்தார்.
“பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாத கணக்குகளை நாங்கள் நீக்கத் தொடங்கியுள்ளோம். அதனால், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைவதை நீங்கள் காணலாம்” என மஸ்க்கின் ட்விட்டை மேற்கோள்காட்டி அனடோலு ஏஜென்சி (Anadolu Agency) செய்தி வெளியிட்டுள்ளது.
ட்விட்டரின் செயல்படாத கணக்குகளுக்கான கொள்கையில், பயனர்கள் குறைந்தது 30 நாட்களுக்கு ஒரு முறை தங்கள் கணக்கை பயன்படுத்த வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், செயல்படாத ஒருவரின் கணக்கை நிரந்தரமாக நீக்க, அந்த கொள்கை தான் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது தெளிவாக தெரியவில்லை.