
பேங்காக் , ஜன 26 – முன்னாள் பிரதமர் Thaksin Shinawatra குறித்து செய்தியாளர்கள் கூட்டத்தில் எழுப்பட்ட கேள்விக்கு தாய்லாந்து பிரதமர் Prayuth Chan -ocha பதில் அளிக்காமல் உடனடியாக அங்கிருந்து வெளிநடப்பு செய்தது ஊடகவியலாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு கடந்து வாழும் Thaksin Shinawatra விரைவில் நாடு திரும்புவாரா என்று செய்தியாளர் ஒருவர் வினவியோது சினமடைந்த Prayuth Chan கூட்டத்திலிருந்து வெளியேறினார். முன்னாள் பிரதமர் Thaksin தலைமையிலான அரசாங்கத்தை 2006 ஆம் ஆண்டு தாய்லாந்து ராணுவ ஆட்சியாளர்கள் பதவி நீக்கம் செய்தனர். அதன் பிறகு நடைபெற்ற பொதுத் தேர்தலில் Thaksi னின் சகோதரி YingLuck போட்டியிட்டு வெற்றி பெற்று அரசாங்கம் அமைத்தார். எனினும் 2014ஆம் ஆண்டு அவரது அரசாங்கத்தை ராணுவ ஆட்சியாளர்கள் கவிழ்த்தனர்.