ஜோர்ஜ் டவுன், டிச 19 – கிரெடிட் கார்டில் செய்யாத பரிவர்த்தனைகளுக்காக தனது வங்கிக்கு 16,000 ரிங்கிட்டிற்குகு மேல் கடன்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டதைத் தொடர்ந்து இறால் மொத்த வியாபாரி ஒருவர் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். தனது வங்கி கணக்கின் மூலம் 995 ரிங்கிட் பரிவர்த்தனைக்கான தனது செல்போனில் ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) ஆகஸ்டு 26 ஆம்தேதி பெற்றதைத் தொடர்ந்து Tan Kean Huat என்ற அந்த வியாபாரி நெருக்கடிக்கு உள்ளானார். அவர் தனது கிரெடிட் கார்டு மூலம் RM2,979.50 பரிவர்த்தனைக்கான மற்றொரு OTP ஐப் பெற்றார். உடனடியாக வங்கியை தொடர்புகொண்டு இந்த பரிவர்த்தனைகளைச் தான் செய்யவில்லை என்று வங்கியிடம் 49 வயதுடைய அந்த வியாபாரி கூறியதோடு கிரெடிட் கார்டில் குளறுபடி ஏற்பட்டிருக்கலாம் என்பதால் பரிவர்த்தனைகளைத் தடுக்கும்படி தெரிவித்ததோடு உடனடியாக கிரெடிட் கார்டையும் ரத்துச் செய்ததாக தெரிவித்தார்.
வேறு சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனை ஏதேனும் உள்ளதா என்று வங்கியிடம் வினவியபோது அவர்கள் இல்லையென்று கூறியதால் தனது வங்கி அட்டையை ரத்துச் செய்துவிட்டு புதிய கார்டை தருவதாக வங்கி அதிகாரிகள் கூறினர். அதன் பிறகு மறுநாள் வங்கி என்னை அழைத்தது மொத்தம்16,150 ரிங்கிட் தொடர்பான 11 பரிவர்த்தனைகள் இருப்பதாகவும் ஒன்பது Touch’n Go விற்கும் மற்றொன்று Razergold க்கும் இருப்பதாக எனக்கு தெரவித்தனர். இதனை தொடர்ந்து இது குறித்து போலீசில் புகார் செய்ததாகவும் ஆனால் இன்றுவரை தனக்கு எந்தவொரு பதிலும் வராமல் இருப்பது குறித்து பெரும் மன உளைச்சலுக்கும் கவலைக்கும்
உள்ளானதாக அவர் கூறினார்.