
கோலாலம்பூர், ஜன 15 – செராஸ் 9 – ஆவது மைல், Cheras Utama அடுக்ககத்திற்கு அருகேயுள்ள சாலை முச்சந்தியில் தனியாக அமர்ந்திருந்த சிறுவன் ஒருவன் கண்டுப்பிடிக்கப்பட்டான். உள்ளூர் மொழியை பேசமுடியாமல் இருந்த சுமார் 4 வயதுடைய அந்த சிறுவனை வெள்ளிக்கிழமை இரவு மணி 11.30 அளவில் ஆடவர் ஒருவர் கண்டு தகவல் கொடுத்தாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ACP Mohd Zaid Hassan தெரிவித்தார். செராஸ் போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட அந்த சிறுவன் எந்தவொரு ஆவணங்களையும் கொண்டிருக்கவில்லை. அச்சிறுவனின் கைகள் மற்றும் உடலில் சிறு காயங்கள் இருந்ததோடு அவன் உள்நாட்டைச் சேர்ந்தவன் இல்லையென்று தெரிகிறது. அச்சிறுவன் சிகிச்சைக்காக பின்னர் காஜாங் மருத்துவமனையில் சேர்க்கப்ட்டதாக Mohd Zaid தெரிவித்தார்.