கோலாலம்பூர், டிசம்பர்-15,கோலாலம்பூர், செராசில் துணி தைக்கும் தொழிற்சாலையொன்றில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனையில், ‘நிறுவன மேலாளர்’ உள்ளிட்ட 50 வெளிநாட்டவர்கள் கைதாகினர்.
ஒரு வங்காளதேசியான 46 வயது அந்த ‘மேலாளர்’, வெளிநாட்டவர்களை சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தி வந்துள்ளார்.
எஞ்சிய 49 பேரில் 34 பேர் வங்காளதேச ஆடவர்கள், 14 பேர் மியன்மார் பெண்கள் ஆவர்.
20 முதல் 60 வயதிலான அவர்கள் அங்கு தையல்காரர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர்.
பொது மக்கள் கொடுத்தப் புகாரை அடுத்து 2 வாரங்களாக வேவுப் பார்த்த அதிகாரிகள், புதன்கிழமை காலை சோதனையில் இறங்கினர்.
அதில் தையல் இயந்திரங்களும், வேலையாட்களின் punch அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
அத்தொழிற்சாலை ஈராண்டுகளாக செயல்பட்டு வந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.