
கோலாலம்பூர், ஏப் 17 – Cheras , Sebarang Jaya மற்றும் Segamat ஆகிய மூன்று வட்டாரங்களில் காற்றின் தூய்மைக்கேடு ஆரோக்கியமாக இல்லையென அறிவிக்கப்பட்டது. நேற்றிரவு முதல் அந்த மூன்று வட்டாரங்களிலும் இருந்த காற்றின் தூய்மைக் கேட்டில் எந்தவொரு மாற்றமும் இன்றி இன்று காலையும் தொடர்கிறது. இதர இடங்களில் காற்றின் தூய்மைக்கேடு மிதமான நிலையிலேயே இருப்பதாக கூறப்பட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளை ஒப்பிடும்போது இவ்வாண்டு புகை மூட்டத்தினால் காற்றின் தூய்மைக் கேடு மிகவும் மோசமாக இருக்குமென இயற்கை வளம், சுற்றுப்புறம் மற்றும் பருவ நிலை மாற்றத்திற்கான அமைச்சர் Nik Nazmi NiK Ahmad தெரிவித்தார்.