Latestமலேசியா

செராஸ் தமிழ்ப்பள்ளி அருகே 42 மாடி கட்டுமானம் தற்காலிகமாக நிறுத்தம்

செராஸ், டிசம்பர் 28 – செராஸ் தமிழ்ப்பள்ளி அருகே முறையான அனுமதியின்றி தொடங்கிய 42 மாடி குடியிருப்புக் கட்டுமானத் திட்டத்தை நிறுத்த டத்தோ பண்டார் அறிவித்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த கட்டுமான வேலைகள், பள்ளி கட்டடத்தைப் பாதிக்க மட்டுமல்லாமல், அதிர்வு சத்தத்தால் மாணவர்களின் சுகாதாரத்திற்கு மன அமைத்திக்கும் கேடு விளைவித்தது.

இதனால், பள்ளி நிர்வாகம் பல்வேறு தரப்புகளுக்குக் கடிதங்களை அனுப்பி, கட்டுமானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை, செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டான் கோக் வாய் நேரில் சென்று, மாணவர்களுக்கும் மக்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளைக் கேட்டு அறிந்தார்.

இதனையடுத்து, அவர் இந்த பிரச்சனையை டத்தோ பண்டாரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இதன் முடிவாக, கோலாலம்பூர் மாநகர் மன்றம் உடனடி நவடிக்கை எடுத்து, கட்டுமான பணிகளை நிறுத்துமாறு அறிவித்ததுடன், கட்டுமான வளாகத்தை தடுப்பு சீலுடன் மூடியது.

இந்த கட்டுமான வேலைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று டத்தோ பண்டார் அறிவித்ததாக பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர் கஜேகேசன் தெரிவித்தார்.

இந்த வேலைகள் தற்காலிகமாக மட்டுமே நிறுத்தப்பட்டுள்ள நிலையில், திட்டத்தை நிரந்தரமாக முடக்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

இந்த இடத்தை பள்ளிக்கான திடலாக்கம் செய்யும் கோரிக்கையை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்றும் பள்ளி மேலாளர் வாரிய உறுப்பினர் அதிலக்ஷ்மி கேட்டுக் கொண்டார்.

இந்த தற்காலிக நிறுத்தம் செராஸ் தமிழ்ப்பள்ளி எதிர்நோக்கிய பிரச்சினைக்கு மிகப்பெரிய தீர்வாக அமையும் என்கின்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என அதிலக்ஷ்மி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!