
கோலாலம்பூர் , நவ 20 – தேசிய வகை செராஸ் தமிழ்ப் பள்ளியும், ஒளி விளக்கு அமைப்பும் இணைந்து கோலாலம்பூர் மாநில அளவிலான வெல்லும் குரல் 2023 போட்டியை இம்மாதம் 25ஆம் தேதியன்று ஏற்பாடு செய்துள்ளனர். இப்போட்டியில் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச வட்டாரத்திலுள்ள உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களும், தேசியப் பள்ளியில் பயிலும் தமிழ் மாணவர்களும் களம் இறங்குகின்றனர்.
கதை கூறும் போட்டி, எழுச்சிப் பாடல் போட்டி, கிராமிய நடனப் போட்டி, பேச்சுப்போட்டி, மாறுவேடப் போட்டி, திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி என மொத்தம் ஆறு போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.
எனவே, இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் கலந்துகொள்வதன் மூலம் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களது தனித்திறனை வளர்த்துக்கொள்வதற்கு பெரும் தன்முனைப்பாக அமையும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.