Latestமலேசியா

செர்டாங் மருத்துவமனையின் பணியாளராக ஆள்மாறாட்டம் செய்த 14 வயது பெண், JKM-மிடம் ஒப்படைக்கப்படுவார்

செப்பாங், ஆகஸ்ட்-12 – செர்டாங் சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையின் பணியாளராக ஆள்மாறாட்டம் செய்ததால் கைதான பதின்ம வயது பெண், செப்பாங் சமூக நலத் துறையிடம் ஒப்படைக்கப்படுவார்.

வயது குறைந்தவர் என்பதால் அம்முடிவெடுக்கப்பட்டிருப்பதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் (Datuk Hussein Omar Khan) தெரிவித்தார்.

என்றாலும் அச்சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை அது பாதிக்காது.

அறிக்கை முழுமைப்பெற்றதும் சட்டத்துறையிடம் ஒப்படைக்கப்படுமென்றார் அவர்.

14 வயது அப்பெண், விரைவிலேயே மனநல பரிசோதனைக்காக அனுப்பப்படுவாரென போலீசை மேற்கோள் காட்டி முன்னதாக தகவல்கள் வெளியாகின.

பெரும் மனக்குழப்பத்திலிருந்ததால் அப்பெண் அவ்வாறு நடந்து கொண்டது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸ் உத்தரவாதத்தில் அவர் விடுவிக்கப்பட்டார்.

மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறைக்குள் அத்துமீறி நுழைந்த அப்பெண், தம்மை மருத்துவ அதிகாரி என அடையாளம் கூறிக்கொண்டதோடு, அறுவை சிகிச்சையிலும் உதவ விரும்புவதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!