செப்பாங், ஆகஸ்ட் 8 – 14 வயது இளைஞன் ஒருவன், செர்டாங் மருத்துவமனையில் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செர்டாங் மருத்துவமனையில் ஒரு வாரக் காலம் ஊழியராக் வேலை செய்த குற்றச்சாட்டின் பேரில் அந்த இளைஞன் கைது செய்யப்பட்டான்.
காஜாங்கில் உள்ள டத்தோ அபு பக்கார் பகிண்டா (Dato Abu Bakar Baginda) காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட போலீஸ் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருவதாக செப்பாங் மாவட்ட காவல்துறை தலைமை உதவி ஆணையர் வான் கமருல் வான் அஸ்ரான்(Wan Kamarul Wan Azran) தெரிவித்தார்.
இது தொடர்பாக சுகாதார அமைச்சும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
எனினும், அந்த சந்தேக நபரின் அடையாளம் மற்றும் நோக்கம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.