Latestமலேசியா

செலாயாங், சுங்கை பீசாங்கில் நீர்பெருக்கின் போது ஆற்றில் சிக்கிய 25 பேர் பாதுகாப்பாக மீட்பு

செலாயாங், ஆகஸ்ட்-12 – சிலாங்கூரில் நேற்று பிற்பகலில் பெய்த கனமழையால் செலாயாங், சுங்கை பீசாங் ஆற்றில் ஏற்பட்ட நீர்பெருக்கில் சிக்கி 25 பேர் பரபரப்பான நிமிடங்களை எதிர்கொண்டனர்.

உல்லாசப் பயணமாக அங்கு வந்திருந்த 20 முதல் 40 வயதிலான அவர்கள், சம்பவத்தின் போது அந்த ஆற்றுச் சுரங்கப்பாதை வாயிலாக கோலாலம்பூரிலிருந்து காராக்கிற்குச் சென்றுக் கொண்டிருந்தனர்.

கனமழை அதிகமாகவே திடீரென நீர்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றுச் சுரங்கத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டனர்.

அந்த 25 பேரில் 20 பேர் உள்நாட்டினர், ஐவர் இந்தோனீசியர்கள் ஆவர்.

தகவல் கிடைத்து வந்து சேர்ந்த செலாயாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் அவர்களைக் காப்பாற்றி கரைக்குக் கொண்டு வந்தனர்.

அதே நேரத்தில், காராக்கிலிருந்து கோலாலம்பூர் நோக்கி அந்த ஆற்றுச் சுரங்கத்தைப் பயன்படுத்திய 39 பேரடங்கிய மற்றொரு குழு, தீயணைப்புத் துறையின் உதவியின்றி தங்களைக் காப்பாறிக் கொண்டது.

கிள்ளான் பள்ளத்தாக்கில் ஞாயிறு காலை முதல் மணிக்கணக்கில் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!