கோம்பாக், ஆகஸ்ட் -29 – சிலாங்கூர், பத்து கேவ்ஸ், செலாயாங் பாருவில் நகைக்கடையொன்றிலிருந்து 2 தங்கச் சங்கிலிகளைத் திருடிக் கொண்டு ஓடிய பெண்ணை போலீஸ் தேடுகிறது.
நகைகளை வாங்குவது போல் கடைக்குள் நுழைந்தவர், தங்கச் சங்கிலிகளைத் திருடிக் கொண்டு வெளியில் காத்திருந்த Toyota Yaris காரில் ஓட்டம் பிடிப்பது, CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.
அந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் வைரலானது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவம் குறித்து கடை உரிமையாளரான 32 வயது ஆடவரும் புகார் செய்துள்ளார்.
அதனடிப்படையில் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ள கோம்பாக் போலீஸ், தகவல் தெரிந்த பொது மக்களின் உதவியையும் நாடியுள்ளது.