Latestவிளையாட்டு
செல்சி கிளப் விற்கப்படுவதை அப்ரமோவிச் உறுதிப்படுத்தினார்
லண்டன், மார்ச் 3- பிரிமியர் லீக் கிளப்பான Chelsea விற்கப்படவிருப்பதை அதன் உரிமையாளர் Roman Abramovich உறுதிப்படுத்தியுள்ளார்.
ரஷ்ய அதிபருக்கு நெருக்கமானவர் என கூறப்படும் அவர், உக்ரேன் படையெடுப்பால் தனது சொத்துக்கள் முடக்கப்படலாமென அச்சத்தை கொண்டுள்ளார்.
அதையடுத்து, கிளப்பின் நலன் மற்றும் அவ்வணியின் ரசிகர்கள், பணியாளர்கள், வர்த்தக பங்காளிகள் ஆகியோரின் நலன் கருதி 2003 -ஆம் ஆண்டில் தாம் வாங்கிய அந்த கிளப்பை விற்க முடிவெடித்திருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் அந்த கிளப்பை விற்பதால் கிடைக்கும் லாபம், உக்ரேனில் போரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ பயன்படுத்தப்படுமெனவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.