கோலாலம்பூர், அக்டோபர்-14, சிலாங்கூரில் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்த அரசியல்வாதி ஒருவரின் ‘பாதுகாப்பான இடமாக’ கோலாலம்பூரில் செயல்பட்டு வந்த அடுக்குமாடி வீட்டில் சோதனையிடப்பட்டதை, மலேசிய ஊழல் தடுப்பாணையம் MACC உறுதிப்படுத்தியுள்ளது.
அவர் வாடகைக்கு எடுத்திருந்த அவ்வீட்டிலிருந்து வெளிநாட்டு நாணயத்தில் 50 லட்சம் ரிங்கிட் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மணல் குத்தகை ஊழல் தொடர்பில் அண்மையில் இருவர் கைதானதன் அடிப்படையில் அந்த அரசியல்வாதியின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
ஊழல் பணத்தையெல்லாம் சேமித்து வைக்கும் ‘பாதுகாப்பான இடமாக’ அவ்வீடு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
கைதான இருவரில் ஒருவருக்கு புற்றுநோய் என்பதால் விடுவித்து விட்டோம்.
இன்னொருவர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக MACC தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி கூறினார்.