ஹர்யானா, பிப் 11 – ஒரு சேலைக்காக மகனின் உயிரைப் பணயம் வைக்கும் அளவில் தாய் ஒருவர் நடந்துக் கொள்வாரா என ஆச்சரியப்படுத்த வைத்த சம்பவம் ஹர்யானா , ஃபரிடாபாத்-தில் ( Faridabad ) நிகழ்ந்திருக்கிறது.
பத்தாவது மாடியில் வசிக்கும் பெண் ஒருவரின் சேலை, பூட்டிக் கிடந்த 9-வது மாடியில் விழுந்திருக்கிறது. அந்த சேலையை எடுப்பதற்காக , படுக்கை விரிப்பு துணியைக் கொண்டு தனது மகனை கட்டி கீழே உள்ள மாடிப் பகுதிக்கு இறக்கியுள்ளார்.
பின்னர், அப்பெண்ணுடன் சேர்ந்து மேலும் சிலர் அச்சிறுவனை மேலே இழுக்குக் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருக்கின்றது. அந்த காணொளியை எதிரே உள்ள கட்டடத்தில் வசிக்கும் ஒருவர் படமெடுத்திருக்கிறார்.
இவ்வேளையில், அந்த பெண்ணின் செயலை, வலைத்தளவாசிகள் பலர் திட்டித் தீர்த்திருக்கும் நிலையில், சேலையை எடுப்பதற்கு பாதுகாப்பான வேறு எந்த முறையும் அந்த பெண்ணுக்கு தெரியவில்லையா என அவர்கள் கேள்வியும் எழுப்பியிருக்கின்றனர்.