Latestசினிமா

நடிகை ராஷ்மிகாவின் “Deep Fake” வீடியோ வெளியிட்ட நபர் கைது

புதுடில்லி, ஜன 21 – கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராஷ்மிகா மண்டனாவின் “Deep Fake” வீடியோ வெளிட்ட நபர் கைது செய்யப்பட்டார். செயற்கை நுண்ணறிவு உதவியோடு கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட அந்த வீடியோ மார்பிங் செய்யப்பட்ட வீடியோவென பின்னர் தெரியவந்தது. தனது “Deep Fake” வீடியோவை உருவாக்கியவரை கைது செய்த டெல்லி போலீசாருக்கு நடிகை ராஷ்மிகா நன்றி தெரிவித்துள்ளார். பொறுப்பவர்களை கைது செய்ததற்கு நன்றி என்று தனது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளார். என்னை அன்புடன் அரவணைத்து, ஆதரவுடன் என்னைக் காக்கும் சமூகத்திற்கு உண்மையிலேயே நன்றியுள்ளவராக உணர்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த “Deep Fake” வீடியோவை வெளியிட்ட 24 வயதான ஈமணி நவீன் என்ற நபர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது, ​​இன்ஸ்டாகிராமில் அதிகமான பின்தொடர்பவர்களைப் பெறுவதற்காக வீடியோவை உருவாக்கியதாக அவர் கூறினார். தம்மை ராஷ்மிகாவின் ரசிகர் என்று கூறிக்கொண்ட நவீன் இந்த வீடியோ நாடு முழுவதும் விவாதத்தை கிளப்பியதையும், பிரபலங்களின் ட்வீட்களையும் பார்த்ததும், பயந்து போய் அந்த பதிவை நீக்கிவிட்டதாக போலீசிடம் தெரிவித்திருக்கிறார். “Deep Fake” வீடியோக்கள் செயற்கை ஊடகம் ஆகும். இதில் ஏற்கனவே உள்ள படம் அல்லது வீடியோவில் உள்ள நபர் வேறொருவரின் தோற்றத்துடன் மாற்றப்படுகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!