
புத்ராஜெயா, மார்ச் 31 – கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தி , 8 சைக்கிளோட்டிகளுக்கு மரணத்தை விளைவித்ததாக Sam Ke Ting எனும் இளம்பெண் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு செல்லாது என, இன்று மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஏனெனில் அப்பெண்ணின் மீது கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டில் குறைபாடுகள் இருப்பதாக, Sam Ke Ting சார்பில் வாதிடும் வழக்கறிஞர் Datuk Hisyam Teh Poh Teik
தெரிவித்தார்.
ஒரே குற்றச்சாட்டில் , கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தியது, ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தியது என இரு குற்றங்களை , குற்றம் சாட்டிய தரப்பு புகுத்தியிருக்கின்றது.
இது சட்டப்படி குற்றமாகும். ஒரு குற்றச்சாட்டில் ஒரு குற்றமே குறிப்பிட முடியுமென Datuk Hisyam வாதிட்டார்.
ஆபத்தான அல்லது கவனக்குறைவான முறையில் வாகனத்தை செலுத்தி உயிரிழப்பை விளைவித்ததாக Sam Ke Ting மீது 2021- இல் உயர் நீதிமன்றம் ஆறாண்டுகள் சிறைத் தண்டனையையும் அபராதத்தையும் விதித்தது.
அந்த நீதிமன் தீர்ப்பை எதிர்த்து அப்பெண் மேல் முறையீடு செய்துள்ளார்.
அந்த மேல் முறையீட்டுக்கான விசாரணத் தொடரும் நிலையில், இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 11-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.