Latestமலேசியா

சைபர்ஜெயாவில் ஆசிய பசிஃபிக்கின் மிகப் பெரிய தரவு மையத்தை அமைக்கும் Vantage Data Centers

சைபர்ஜெயா, ஆகஸ்ட்-6 – அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட  மாபெரும் தரவு மைய வழங்குநர் நிறுவனமான Vantage Data Centers, ஆசியப் பசிஃபிக் வட்டாரத்திலேயே மிகப் பெரிய தரவு மையத்தை சைபர்ஜெயாவில் அமைக்கவிருக்கின்றது.

சைபர்ஜெயாவில் 14.16 ஹெக்டர் நிலப்பரப்பில் 256 மெகாவாட் சக்தியில் அந்த KUL 2 campus வளாகம் செயல்படவிருக்கின்றது.

முதல் வளாகத்தை விட 8 மடங்கு பெரியதாக அமையவிருக்கும் அம்மையம், கிளவுட் (Cloud)  மற்றும் AI அதிநவீன தொழில்நுட்ப அமுலாக்கத்தை மேற்கொள்ளும் ஆற்றலுடன் திகழவிருக்கின்றது.

Vantage நிறுவனத்தின் இந்த KUL 2 வளாகமானது, மலேசியாவில் இலக்கவியல் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாது, மலேசியத் தொழில்முனைவர்களுக்கு வாய்ப்புகளையும், ஏராளமான வேலை வாய்ப்புகளையும் உருவாக்குமென, இலக்கயியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ சொன்னார்.

நிதித்துறை, சுகாதாரம், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் AI தொழில்நுட்ப ஆற்றலுக்குப் பெருகி வரும் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அதிகச் சுமையிலான பணிகளை மேற்கொள்வதற்கு இந்த தரவு மைய வழங்குநர் நிறுவனம், கணினி சக்தி, தரவு சேமிப்பு போன்றவற்றை தயார் செய்கிறது.

தரவு மைய முதலீடுகளுக்கு இரு முக்கியச் சவாலாக இருப்பது எரிசக்தியும் தண்ணீரும் தான்; இது போன்ற தரவு மைய நிர்மாணிப்பு விரைந்து மேற்கொள்ளப்பட,  அவை போதுமான அளவில் இருப்பதை அரசாங்கம் உறுதிச் செய்ய வேண்டியிருப்பதாக கோபிந்த் சொன்னார்.

சைபர்ஜெயாவில் இன்று காலை KUL2 அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று பேசிய போது கோபிந்த் சிங் அவ்வாறு கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!