செப்பாங், செப்டம்பர் -14, சைபர்ஜெயாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 71 வயது மூதாட்டி மர்ம நபரால் கற்பழிக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை இரவு அந்த அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் வைத்து அந்நிய நாட்டு ஆடவன் அச்செயலைப் புரிந்துள்ளான்.
வீட்டுக்குச் செல்வதற்காக அம்மூதாட்டி தனியாக லிப்ட்டுக்குக் காத்திருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
இதையடுத்து உணவக ஊழியரான 25 வயது ஆடவன் கைதாகியுள்ளான்.
விசாரணைக்காக அவன் இன்று முதல் தடுத்து வைக்கப்படவிருப்பதாக செப்பாங் போலீஸ் கூறியது.