
செப்பாங், பிப் 21 – சைபர்ஜெயாவுக்கு அருகேயுள்ள ஏரியில் ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட உடல் மீட்கப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை அரசாங்க தரப்பு வழக்கறிஞர் டி.பி.யிடம் போலீசார் சமர்ப்பித்துள்ளனர். செப்பாங் துணை ஓ.சி.பி.டி சூப்பிரடண்ட் Md Noor Aehwan Mohamad இதனை உறுதிப்படுத்தினார். விசாரணை அறிக்கை என அரசு தரப்பு வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால் அவர்களது முடிவுக்காக காத்திருக்கிறோம் என்று Md Noor கூறினார்.
அந்த ஏரியில் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 23 முதல் 52 வயதுடைய முன்று இந்திய பிரஜைகளை போலீசார் கைது செய்தனர். ஒரு பெண்ணுக்காக ஏற்பட்ட தகராறே அந்த கொலைக்கு காரணம் என நம்பப்படுகிறது. அந்த கொலைக்கு பயன்படுத்தியதாக நம்பப்படும் வெட்டுக் கத்தியையும் அந்த சந்தேகப் பேர்வழியிடம் பறிமுதல் செய்யப்பட்டது. கொலை செய்யப்பட்டவரின் தலையில் மூன்று வெட்டுக் காயங்கள் இருந்ததோடு இடது கையின் மணிக்கட்டு கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தது .