
கோலாலம்பூர்,பிப் 3 -செம்பனை எண்ணெய் தயாரிப்பில் , Sime Darby Plantation நிறுவனம், தொழிலாளர்களை கடும் உடல் உழைப்புக்கு உட்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை , அமெரிக்கா மீட்டுக் கொண்டது .
2020-இல், கட்டாய உடல் உழைப்பு தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டினால் ,அமெரிக்கா அந்நிறுவனத்தின் தயாரிப்பு பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதித்தது .
உடல் -பாலியல் வன்முறை, மிரட்டல், அடையாள ஆவணங்களை பறித்து வைத்திருந்தது, ஊதியத்தை பிடித்து வைத்திருந்தது, அதிகப்படியான வேலை நேரம் ஆகிய குற்றச்சாட்டுகளை Sime Darby நிறுவனம் எதிர்நோக்கியிருந்தது.
அந்த குற்றச்சாட்டுகளை மறுத்து தங்களது நிறுவனம் மீதான தடையை அகற்றும்படி, Sime Darby அமெரிக்காவின் சுங்க- எல்லை பாதுகாப்பு துறைக்கு கடந்தாண்டு ஏப்ரலில் அறிக்கை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.