கோத்தா பாரு, பிப் 24, இன்று காலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கோத்தா பாரு , Jalan Gajah Mati யில் செயல்பட்ட சைவ உணவகம் ஒன்று தீயில் அழிந்தது. காலை 10 மணியளவில் உணவத்தில் தீ விபத்து ஏற்பட்டபோது தமது பெற்றோர் மட்டுமே அங்கு இருந்ததாக அந்த உணவகத்தின் உரிமையாளர் Liew Anne தெரிவித்தார்.
உணவகத்தின் கூரைப்பகுதி மரக் கட்டையில் அமைக்கப்பட்டிருந்ததால் தீ விரைவாக பரவியதாகவும் உணவகத்தின் முகப்பிடத்தில் வைக்கப்பட்டிருந்த பணமும் தீயில் அழிந்ததாக Liew Anne கூறினார்.