
கோலாலம்பூர், நவம்பர் 20 – EPF, ஊழியர் சேம நிதி வாரியத்தின், மூன்றாவது “தளர்வு” கணக்கு, அடுத்தாண்டு ஏப்ரலில் அறிமுகம் காணுமென அரசாங்கம் எதிர்பார்ப்பதாக, நிதி துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு பிப்ரவரியில், EPF சந்தாதாரர்களுக்கான லாப ஈவு அறிவிக்கப்பட்ட பின்னர், அந்த மூன்றாவது கணக்கு குறித்தும் விளக்கமளிக்கப்படுமென அஹ்மாட் மஸ்லான் கூரினார்.
அதனால், அந்த மூன்றாவது கணக்கு குறித்து, பொதுமக்கள் அல்லது நிறுவனங்கள் தங்கள் கருத்துகளை தொடர்ந்து அரசாங்கத்திடம் முன் வைக்கலாம்.
EPF சந்தாதாரர்களின், இலாப ஈவு வருவாயை பாதிக்காமல் இருப்பதை உறுதிச் செய்யும், மிகச் சிறந்த அணுகுமுறையை அரசாங்கம் தொடர்ந்து ஆராய்ந்து வருவதையும் அஹ்மாட் மஸ்லான் சுட்டிக் காட்டினார்.
சந்தாதாரர்கள் ஆபத்து அவசர வேளைகளில் மட்டுமே, அந்த மூன்றாவது கணக்கிலிருந்து பணத்தை மீட்க முடியும். எனினும், எதுபோன்ற சூழ்நிலை அல்லது காரணங்களுக்காக பணத்தை மீட்க முடியும் என்பதை நிர்ணயிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.