
கோலாலம்பூர், மே 15- ஹரிராயா பெருநாளை முன்னிட்டு சொக்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று பொது உச்சரிப்பு ஜாலான் அம்பாங்கில் உள்ள சொக்சோ கட்டிட வளாகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சொக்சோ நிறுவனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ சுபாஹான் கமால், சொக்சோ நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான் தலைமையில் நடைபெற்ற இந்த பொது உச்சரிப்பில் மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் கலந்து சிறப்பித்தார். சொக்சோ இயக்குநர் டி . கண்ணன் உட்பட சொக்சோ ஊழியர்களும் திரளாக இந்த பொது உச்சரிப்பில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.