Latestமலேசியா

பங்கோரில் நீர் தட்டுப்பாடு ஆயிரக்கான பக்தர்கள் திரளும் மாசிமக திருவிழாவில் நிலைமை சீர்படுமா ?

பங்கோர், பிப் 21 – பேராவில் சுற்றுலாவிற்கு புகழ் பெற்று விளங்கும் பங்கோர் தீவில் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையும் , சனிக்கிழமையும் பத்திர காளியம்மன் ஆலயத்தில் நடைபெறவிருக்கும் மாசிமக திருவிழாவின்போது நிலைமை சீரடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஒரு வார காலமாக பங்கோர் வட்டாரத்தில் மோசமாக நீர் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மஞ்சோங் மாவட்ட நீர் விநியோக வாரியம் டாங்கர்களில் நீர் விநியோகம் செய்து வருகிறது. கடலுக்கு அடியில் உள்ள மூன்று முக்கிய குழாய்களில் ஒன்றில் ஏற்பட்ட கசிவுதான் பங்கோர் தீவில் தற்போதைய தண்ணீர் தடைக்கு காரணம் என்று பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ முகமது நிசார் ஜமாலுடின் உறுதிப்படுத்தியிருந்தார்

பழுதுபார்ப்புக்குப் பிறகும் நீர் அழுத்தம் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. தீவின் ஒரு பகுதியில் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் ஹோட்டல்களில் உள்ள நீர் குழாய்களில் நீர் அழுத்தம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. வார இறுதி விடுமுறை மற்றும் மாசி மக திருவிழாவை பயன்படுத்தி அதிமான மக்கள் பங்கோர் தீவுக்கு வருகை புரிவார்கள் என்பதால் நீர் தேவையும் அதிகரித்துள்ளதாக மஞ்ஞோங் மாவட்ட நீர் வாரிய அதிகாரி தெரிவித்தார். நிலமையை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் தீர்வுக்காணப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதனிடையே மாசி மக திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார் என்பதால் நீர் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது. இது தொடர்பாக பத்ர காளியம்மன் ஆலயத் தலைவர் எஸ். மோகனதாசிடம் தொடர்புக் கொண்டு விளக்கம் கேட்டபோது, பிரச்னையை தீர்க்க பேரா நீர் விநியோக வாரியம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!