Latestமலேசியா

சொத்துக் குவிப்பு; துன் டாய்ம் மறைந்தாலும் விசாரணைத் தொடருவதாக MACC அறிவிப்பு

கோலாலம்பூர், நவம்பர்-23, அண்மையில் காலமான முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் சைனுடின் (Tun Daim Zainuddin) மீதான விசாரணையை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் MACC இன்னமும் தொடருகிறது.

டாய்ம் நிதியமைச்சராக இருந்த காலத்தில் நடந்தவவை எனக்கூறி Pandora Papers ஆவணங்களில் வெளியான தகவல்கள் அடிப்படையில், 2023-ல் சில விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டன.

விசாரணையின் ஒரு பகுதியாக, டாய்ம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தனக்கிருக்கும் அனைத்து சொத்து விவரங்களையும் அறிவிக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

இந்நிலையில், 70 சொத்துடைமைகளையும் ஒரு வங்கிக் கணக்கையும் அறிவிக்கத் தவறியதாக MACC சட்டத்தின் கீழ் இவ்வாண்டு ஜனவரியில் நீதிமன்றத்தில் டாய்ம் குற்றமும் சாட்டப்பட்டார்.

எனினும் டாய்ம் நவம்பர் 20-ஆம் தேதி காலமானதால், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் அவ்வழக்கிலிருந்து அவரை விடுவித்தது.

என்றாலும் தங்களின் விசாரணை நிறுத்தப்படவில்லை; டாய்மின் மனைவி மற்றும் பிள்ளைகள் வெளிநாடுகளில் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கள் குறித்தும் விசாரித்து வருவதாக MACC தெளிவுப்படுத்தியது.

டாய்ம் மீதான விசாரணை நிறுத்தப்பட்டு விட்டதாக சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!