கோலாலம்பூர், நவ 20 – சொத்து விவரங்களை அறிவிக்கத் தவறிய குற்றச்சாட்டிலிருந்து மறைந்த முன்னாள் நிதியமைச்சர் துன் டைய்ம்
ஜைனுடினை செஷன்ஸ் நீதிமன்றம் விடுவித்து இன்று தீர்ப்பளித்தது.
பல்வேறு ஆடம்பர வாகனங்களுடன் பேராக் மற்றும் கெடாவைச் சுற்றியுள்ள பல நிறுவனங்கள் மற்றும் சொத்து விவரங்களை அறிவிக்கத் தவறியதாக இதற்கு முன் டைய்ம் குற்றச்சாட்டிற்கு உள்ளாகியிருந்தார்.
CPC எனப்படும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 254 வது விதியின் கீழ் குற்றச்சாட்டிலிருந்து டைய்ம் விடுவிக்கப்பட்டதாக நீதிபதி அசுரா அல்வி தீர்ப்பளித்தார். அதோடு டைய்ம் மறைவுக்காக அவரது குடும்பத்திற்கு நீதிமன்றம் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டது. டைய்ம் காலமானதை தொடர்ந்து அவருக்கு எதிரான வழக்கை தொடர்வதில்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் டி.பி.பி டத்தோ வான் ஷஹாருடின் ( Wan Shahruddin ) இதற்கு முன் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.