Latestமலேசியா

சொந்தப் பணத்தில் சாலை விளக்குகளைப் பொருத்தியப் பண்பாளருக்கு பாராட்டு மழை

கோலாலம்பூர், ஜூன்-19 – தான் குடியிருக்கும் பகுதியில் சொந்தச் செலவில் சாலை விளக்குகளைப் பொருத்திய உள்ளூர் ஆடவரை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

இரவு நேரங்களில் சாலைகள் மிகவும் இருட்டாக இருப்பதைக் கண்ட Sunny Coco எனும் அந்நபர், அதிகாரத் தரப்பிடம் செல்லாமல் தானாககே செயலில் இறங்கினார்.

எந்த இடம் என்று குறிப்பிடாமல் சாலை விளக்குகளைப் பொருத்தும் வேலைகள் நடப்பதைக் காட்டும் புகைப்படங்களை தனது facebook பக்கத்தில் அவர் பதிவேற்றியுள்ளார்.

மண்வாரி இயந்திரத்தின் மீதேறி மின் கம்பத்தில் விளக்குகள் பொருத்தப்படுவது அவற்றில் தெரிகிறது.

ஒவ்வொரு விளக்குக்கும் இரண்டாயிரம் ரிங்கிட் வரை செலவானதாக Sunny கூறினார்.

பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் அவரின் நல்லுள்ளத்தைப் பாராட்டி வருகின்றனர்.

உங்களின் நல்ல மனதுக்கு வாழ்த்துகள் என்றும், ஊரார் நலனுக்கான உங்களின் சேவை தொடரட்டும் என்றும் Sunny Coco-வுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!