
பாஹாவ், மார்ச் 23 – மாணவியிடம் முறைகேடாக நடந்துக் கொண்டதாக ஒப்புக் கொள்ளும்படி இரு ஆசிரியர்கள் வற்புறுத்தியதால், அவமானம் தாங்காமல் , நான்காம் படிவ மாணவர் ஒருவர் உடைந்த கண்ணாடியைக் கொண்டு, தன்னை காயப்படுத்திக் கொண்டார்.
பள்ளி இடைவேளை நேரத்தில், ரத்தம் கொட்ட வகுப்பறையில் இருந்த அந்த மாணவரை, சக மாணவர் கண்டு , பின்னர் ஆம்புலன்சில் பாதிக்கப்பட்ட மாணவர் அருகிலுள்ள சுகாதார கிளினிக்கிற்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு வலது கையிலும், கழுத்திலும் 22 தையல்கள் போடப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பில், அந்த மாணவரின் தந்தை ,தனது மகனை கண்டித்த இரு ஆசிரியர்கள் மீது, Bandar Seri Jempol போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
சம்பவத்தின் போது, தனக்கு நன்கு அறிமுகமான மாணவி தனது பிறந்தநாளை முன்னிட்டு பரிசை கொடுக்க விரும்புவதாக, பாதிக்கப்பட்ட மாணவர் கூறியிருந்தார்.
அதையடுத்து, அந்த பரிசை பெற்றுக் கொள்ள அப்பெண்ணின் வகுப்பறைக்கு சென்றதாகவும், அதைப் பார்த்து சந்தேகப்பட்ட இரு ஆசிரியர்கள், தான் அந்த மாணவியிடம் முறைகேடாக நடந்து கொள்ள முயற்சித்தேனா என கேட்டதாக அந்த மாணவர் குறிப்பிட்டார்,
நானும் அந்த மாணவியும் அதை மறுத்த வேளை, ஆண் ஆசிரியர் ஒருவர், தான் அந்த மாணவியிடம் முறைகேடாக நடந்து கொண்டதாக ஒப்புக் கொள்ளக் கூறி, தாள் ஒன்றில் எழுதி கையெழுத்திடுமாறு கட்டாயப்படுத்தியதாக, அந்த மாணவர் கூறினார்.