Latestஉலகம்மலேசியா

சொந்தமாக தயாரிக்கப்பட்ட குண்டு வெடித்தது; ஒருவர் மரணம், மற்றொருவர் காயம்

சிபு, ஜூன் 10 – சொந்தமாக தயாரிக்கப்பட்ட குண்டு வெடித்ததில் ஒருவர் மாண்டதோடு மற்றொரு நபர் காயம் அடைந்தார். Meradong, Jalan Sungai Pidiயில் நீண்ட குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள சாலையில் அந்த இருவர் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாதில் அவர்கள் வைத்திருந்ததாக நம்பப்படும் அந்த நாட்டு வெடிகுண்டு வெடித்தது. மோட்டார் சைக்கிளோட்டியான 23 வயதுடைய Lawrence Lujang விபத்து நிகழ்ந்த இடத்திலே மாண்டார்.

கால் மற்றும் தொடையில் கடுமையான காயத்திற்குள்ளான 53 வயதுடைய Ching Lamba என்ற மற்றொரு நபர் Sarikei மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெரிய அளவிலான வெடிப்புச் சத்தம் கேட்டதாக போலீஸ்சிற்கு தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு போலீஸ் விரைந்ததாக Meradong மாவட்ட போலீஸ் தலைவர் DSP Sekam Anoi கூறினார்.

அருகேயுள்ள காட்டில் வேட்டைக்கு செல்வதற்காக அவர்கள் இருவரும் சொந்தமாக நாட்டு வெடிகுண்டை தயாரித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருதாக DSP Sekam Anoi தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!