Latestஉலகம்மலேசியா

ஜப்பானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை

கோலாலம்பூர், ஜன 2 – ஜப்பானில் நேற்று மாலை நிகழ்ந்த பெரிய அளவிலான நில நடுக்கத்தில் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லையென வெளியுறவு அமைச்சு தெரிவித்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள மலேசியர்கள் தொடர்ந்து விழிப்பாக இருக்க வேண்டும் என்பதோடு உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையை பின்பற்றும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

ஜப்பானின் மத்திய பகுதி மற்றும் மேற்குக்கரையில் உலுக்கிய நில நடுக்கம் தொடர்பான ஆகக்கடைசியான நிலவரங்களை கண்காணித்து வருவதாகவும் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே அந்த நில நடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி ஜப்பானிய மக்கள் மற்றும் அந்நாட்டு அரசாங்கத்திற்கும் மலேசியா தனது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.

ரெக்டர் கருவியில் 7.6 அளவில் பதிவான நிலநடுக்கத்தினால் பல கட்டிடங்கள் இடிந்ததோடு ஆயிரக்கணக்கான வீடுகளிலும் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டதோடு பயணச் சேவைகளும் பாதிக்கப்பட்டன. இதனால் ஜப்பான், தென் கொரியா, வட கொரியா, மற்றும் ரஷ்யாவின் சில பகுதிகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!