Latestமலேசியா

சொந்த தங்கையை பல முறை பாலியல் வன்முறை செய்த கொடுமைக்கார சகோதரன்

கிள்ளான், பிப் 2 – 2018 ஆகஸ்ட் தொடங்கி , கிள்ளான் , ஜாலான் கெபுன் பகுதியில் வீட்டில் , தனது சொந்த தங்கையையே பாலியல் வன்முறை செய்து வந்த கொடிய சகோதரனைப் போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தற்போது வயது 22 ஆகும். தற்போது உணவு கடை ஒன்றில் உதவியாளராக வேலை செய்து வரும் அந்தப் பெண், முதல் முறையாக தனது சகோதரன் , அதிகாலை நேரத்தில் அறைக்குள் புகுந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்தப் பின்னர் தப்பித்து ஓடியதாக போலீசிடம் தெரிவித்துள்ளார்.

அந்தச் சம்பவத்திற்குப் பின்னர் பல முறை தனது சகோதரன் தன்னை பாலியல் வன்முறை செய்ததாகவும் , அதன் தொடர்பில் தனது பெற்றோரிடம் தெரிவித்ததாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார். எனினும் தான் கூறுவதை தனது பெற்றோர் நம்பவில்லை என அப்பெண் தனது போலிஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ரஹ்மாட் அரிஃபின் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!